ஆஸ்திரேலிய யுரேனியத்தைப் பெற இந்தியா ஒப்பந்தம்
வாசிப்புநேரம் -
படம்: AFP/William West
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ஆஸ்திரேலியாவுடன் யுரேனிய விநியோக ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் அணுச்சக்தி இலக்குகளை அடைய அது முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் அணுச்சக்தி உற்பத்தியைப் பெரிய அளவில் அதிகரிக்கத் திரு மோடி திட்டமிடுகிறார்.
மெல்பர்ன் சென்றிருக்கும் பிரதமர் மோடி ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசியைச் (Anthony Albanese) சந்தித்தார்.
அணுச்சக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகச் சந்திப்புக்குப் பின் திரு மோடி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு யுரேனியம் இறக்குமதி செய்ய அது வழிவகுக்கும் என்று அவர் சொன்னார்.
முற்றிலும் அமைதியான பயன்பாட்டுகளுக்காக யுரேனியம் விநியோகம் செய்யப்படும் என்று இருநாட்டுக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
உலகில் உள்ள யுரேனியத்தில் சுமார் 28 விழுக்காடு ஆஸ்திரேலியாவில் உள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi