Skip to main content
டிரம்ப்பைச் சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் மோடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப்பைச் சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் மோடி

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அடுத்த வாரம் வாஷிங்டனில் சந்திக்கவிருக்கிறார்.

திரு மோடியின் இரண்டு நாள் பயணத்தின்போது வர்த்தகம், எரிசக்தி, தற்காப்பு போன்ற விவகாரங்களைத் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஒருசில வாரங்களில் அங்குச் செல்லும் வெளிநாட்டுத் தலைவர்களில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர்.

புதிய நிர்வாகத்துடன் உறவை வலுப்படுத்திக்கொள்ளத் திரு மோடி அங்குப் போகிறார்.

இரு நாடுகளின் தலைவர்களும் சென்ற வாரம் தொலைபேசியில் உரையாடினர்.

நம்பிக்கை அடிப்படையிலான உறவைக் கட்டிக்காக்க இருவரும் உறுதிபூண்டனர்.

நியாயமான இரு தரப்பு வர்த்தக உறவை எட்டுவதன் முக்கியத்துவத்தைத் திரு டிரம்ப் வலியுறுத்தினார்.

QUAD கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல உறுதியுடன் இருப்பதாகவும் தலைவர்கள் தெரிவித்தனர்.

QUAD அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் உள்ளன.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்