Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இரண்டு மில்லியன் நூல்களைக் கொண்டு சுயமாக நூலகத்தை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஊழியர்

வாசிப்புநேரம் -
இரண்டு மில்லியன் நூல்களைக் கொண்டு சுயமாக நூலகத்தை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஊழியர்
படம்: Envato Elements
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இரண்டு மில்லியன் புத்தகங்களைக் கொண்டு சுயமாக நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறார் ஓய்வு பெற்ற இந்தியத் தொழிற்சாலை ஊழியர் அங்கே கவுடா (Anke Gowda).

யார் வேண்டுமானாலும் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கலாம்.

பெரிய கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது நூலகம்.

அங்கு 2 மில்லியன் புத்தகங்கள் உள்ளன.

அவை கவுடா கடந்த 50 ஆண்டுகளாகச் சேகரித்து வைத்தவை.

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கவுடா சர்க்கரைத் தொழிற்சாலையில் வேலை செய்து ஓய்வு பெற்றார்.

கல்வியை ஊக்குவிக்கும் மகத்தான பணிக்காக 79 வயது அங்கே கவுடாவுக்குக் கடந்த மாதம் பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த கவுடா வளரும் பருவத்தில் புத்தகங்கள் கிடைக்காமல் தவித்திருக்கிறார். அது அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

"நான் படிக்க வேண்டும், புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். அறிவைப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்," என்கிறார் கவுடா.

ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்