பல்லிகள், Tarantula சிலந்திகள் - கடத்த முயன்ற இந்தியர் பிடிபட்டார்
வாசிப்புநேரம் -

படம்: AFP/Sebastian Gollnow
இந்தியச் சுங்கத்துறை அதிகாரிகள் அருகிவரும் வனவிலங்குகளைக் கணிசமான அளவில் பறிமுதல் செய்துள்ளனர்.
தாய்லந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணி கிட்டத்தட்ட 100 உயிரினங்களைக் கடத்த முயன்றதாக அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பல்லிகள், சூரியப்பறவைகள், மரங்களில் ஏறும் Possum எனும் விலங்கு ஆகியவை அதில் அடங்கும்.
பிடிபட்ட பயணி 2 tarantula வகை சிலந்திகளையும் ஆமைகளையும் வைத்திருந்தார்.
அவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த போது பதற்றத்துடன் காணப்பட்டார்.
இம்மாதத் தொடக்கத்தில் நச்சுப் பாம்புகளைத் தாய்லந்திருந்து கொண்டு வந்த ஆடவர் பிடிபட்டார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் அது போன்ற கடத்தல் முயற்சி நடந்துள்ளது.

ஆதாரம் : AFP