Skip to main content
தேர்வில் குளறுபடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தேர்வில் குளறுபடி - ஜார்க்கண்ட்டில் தீவிரமடையும் ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -
தேர்வில் குளறுபடி - ஜார்க்கண்ட்டில் தீவிரமடையும் ஆர்ப்பாட்டம்

Sajjad HUSSAIN / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 10 Aug 2026 05:28PM புதுப்பிப்பு : 10 Aug 2026 05:29PM

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வுகள் நடத்தப்படும் விதம் குறித்து ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைகின்றன.

அரசாங்க வேலைகளுக்குத் தகுதி பெறும் தேர்வுகளில் குளறுபடி நடப்பதாக மாணவர்கள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களில் சிலர் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

அண்மையில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஆயிரக்கணக்காணோர் NEET மருத்துவத் தேர்வுக் கசிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் விளைவாக ஜூலை 25ஆம் தேதி இந்தியாவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

ஜார்க்கண்டில் ஆர்ப்பாட்டங்கள் ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது.

ஜார்க்கண்டில் உண்ணாவிரதம் நடத்தும் ஒருவர், தேர்வுகள் நடத்தப்படும் முறையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

அங்குத் தேர்வுகளை அரசாங்கம் சார்பாகத் தனியார் நிறுவனம் ஒன்று நடத்துகிறது.

தேர்வுகளை ரத்து செய்யும்படியும் தனியார் நிறுவனத்தை விசாரிக்கும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜார்க்கண்ட் அரசாங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநிலச் சட்டமன்றக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

முன்னெச்சரிக்கையாகக் கட்டடத்தைச் சுற்றி  காவல்துறை தடுப்புகளை வைத்திருக்கிறது.

இந்தியா முழுவதும் இளையர்களிடையே விரக்தி அதிகரிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வேலையின்மை.

புதுடில்லியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும் சவாலாக இருந்தன.

ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் எதிர்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (Jharkhand Mukti Morcha) கட்சி வசம் இருக்கிறது. 

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்