Skip to main content
உலகச் சதுரங்கப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகச் சதுரங்கப் போட்டி - ஆக இளைய போட்டியாளராக இந்தியர்

வாசிப்புநேரம் -
உலகச் சதுரங்கப் போட்டி - ஆக இளைய போட்டியாளராக இந்தியர்

படம்: Venkat Krishnan N/facebook

இந்தியாவின் குகேஷ் தொம்மராஜு (Gukesh Dommaraju) கனடாவில் நடந்த உலகச் சதுரங்கப் போட்டியின் ஆண்கள் தேர்வுச் சுற்றில் வெற்றி பெற்ற ஆக இளைய போட்டியாளராவார்.

அவருக்கு வயது 17.

CNN செய்தி நிறுவனம் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டது.

இவ்வாண்டு நடைபெறவிருக்கும் உலகச் சதுரங்கப் போட்டியில் குகேஷ் பங்கேற்க அவரது வெற்றி வழியமைத்துள்ளது.

அங்கு சீனாவின் டிங் லிரெனை (Ding Liren) குகேஷ் எதிர்கொள்வார்.

இதற்கு முன் உலகச் சதுரங்கப் போட்டியில் வென்ற ஆக இளையவரின் வயது 22.

குகேஷ் அந்தச் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

டிங்கைத் தோற்கடித்தால் உலக சதுரங்கப் போட்டியில் வென்ற ஆக இளையர் என்ற பெருமை குகேஷைச் சேரும்.

"உணர்ச்சிமயமாய் இருந்தேன். போட்டி முடிந்ததும் நன்றாக இருக்கிறது. ஆக இளையவராகச் சாதனை படைப்பது பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், அப்படிச் சொல்வது நன்றாக இருக்கிறது," என்று குகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகச் சதுரங்கப் போட்டியில் பங்கேற்க குகேஷ் ஆவலாய் இருப்பதாக CNN தெரிவித்தது.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்