உலகின் ஆக இளம் சதுரங்க வெற்றியாளர் - குகேஷ் தொம்மராஜூ
![உலகின் ஆக இளம் சதுரங்க வெற்றியாளர் - குகேஷ் தொம்மராஜூ உலகின் ஆக இளம் சதுரங்க வெற்றியாளர் - குகேஷ் தொம்மராஜூ](https://dam.mediacorp.sg/image/upload/s--XsVzzhAD--/c_fill,g_auto,h_468,w_830/f_auto,q_auto/v1/mediacorp/seithi/images/2024/12/12/469836668_1555129815181450_90766.png?itok=lZCD_hZ6)
படம்: Facebook/FIDE/Eng Chin An
உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 18 வயது குகேஷ் தொம்மராஜூ (Gukesh Dommaraju) வெற்றிபெற்றுள்ளார்.
அவருக்கு 1.35 மில்லியன் டாலர் (1.82 மில்லியன் வெள்ளி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அவர் சீனாவின் 32 வயது டிங் லிரனை (Ding Liren) வெற்றிகண்டார்.
உலகச் சதுரங்கப் போட்டியில் வென்ற ஆக இளையர் என்ற பெருமை குகேஷைச் சேரும்.
1985ஆம் ஆண்டிலிருந்து உலகப் புகழ்பெற்ற சதுரங்க வீரர் கேரி காஸ்பரோவுக்கே (Garry Kasparov) ஆக இளையர் என்ற பெருமை சேரும்.
அவர் வெற்றிபெற்றபோது அவருக்கு வயது 22.
உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று Resorts World Sentosaவில் நடைபெற்றது.