அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கார்ட்டரைப் பறைசாற்றும் 'கார்ட்டர்பூரி' கிராமம்

REUTERS/Amr Abdallah Dalsh/File Photo
அமெரிக்காவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம்...
அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் பெயரைக் கொண்டுள்ளது ஒரு கிராமம்.
இந்தியாவின் ஹரியானா (Haryana) மாநிலத்தில் உள்ளது கார்ட்டர்பூரி.
டில்லியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம் முன்னர் தவ்லத்பூர் நசீராபாத் (Daulatpur Nasirabad)என்று அழைக்கப்பட்டது.
1978இல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்ட்டர் கிராமத்துக்கு வந்துசென்ற பிறகு பெயர் மாற்றப்பட்டது.
திரு கார்ட்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29 டிசம்பர்) காலமானார். அவருக்கு வயது 100.
கார்ட்டர்பூரிவாசிகள் கடந்த ஒரு வாரமாக அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
கிராமத்தில் அவருடைய படத்துக்கு மாலைகளும் மலர்களும் சூட்டப்பட்டன.
1960களில் திரு கார்ட்டரின் தாயார் முதன்முதலில் கிராமத்துக்கு வந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
அங்கு லில்லியன் தாதியாகச் சிறிது காலம் தொண்டூழியம் செய்தார்.
அதிபராகப் பொறுப்பேற்றப் பின்னர் மகனான திரு கார்ட்டர் துணைவியுடன் கிராமத்தைப் பார்க்கவருவதாகச் சொன்னார். அதைக் கேட்டபோது கிராமமே குதூகலத்தில் இறங்கியது.
பல மாத ஏற்பாடு... கிராமம் எங்கும் அலங்காரங்கள்... கார்ட்டர் தம்பதிக்கு ராஜ உபசரிப்பு...
திரு கார்ட்டர் பின்னர் உபசரிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தையும் எழுதினார்.
கடிதத்தைப் பொக்கிஷமாக வைத்திருந்த கிராமம் பெயரையும் மாற்றிக்கொண்டது.
திரு கார்ட்டருக்கு அடுத்த வியாழக்கிழமை (9 ஜனவரி) வாஷிங்டன் நகரில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.
அவருடைய நல்லுடல் தற்போது ஜார்ஜியாவில் (Georgia) வைக்கப்பட்டுள்ளது.