உலகம் trending
"என் வேலையை எடுத்துக்கொள்" - AI இயந்திரங்களுக்குப் பயிற்சி அளிக்கும் இந்தியர்கள்
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
செயற்கை நுண்ணறிவால் (AI) வேலை போய்விடுமோ என அஞ்சும் ஊழியர்கள் ஒரு பக்கம்...
தாம் பார்க்கும் வேலையை AI எப்போது தான் எடுத்துக்கொள்ளும் என ஏங்குவோர் இன்னொரு பக்கம்...
இல்லத்தரசிகள் அதில் 2ஆவது ரகம்.
சமைப்பது... மாம்பழம் வெட்டுவது... என அனைத்தையும் செய்துகொண்டே காணொளியிலும் படம் பிடிக்கிறார் இல்லத்தரசி நாகிரெட்டி ஸ்ரீரம்யசந்திரா...
ஒரு மணி நேரக் காணொளிக்கு 250 ரூபாய் சம்பளம்.
மனிதர்களைப் போல் நடமாட இயந்திரங்களுக்குக் கற்றுக்கொடுக்க அதுபோன்ற காணொளிகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
ஸ்ரீரம்யசந்திராவைப் போல் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் AI இயந்திரங்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
எதிர்காலத்தில் தாமும் ஒரு மனித இயந்திரத்தை வாங்கலாம் என்கிறார் அவர்.
வீடுகளில் மட்டுமல்ல... தொழிற்சாலைகள், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் AI பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
AI நிறுவனமான Objectways தமிழ்நாட்டில் அந்த வேலைக்கு ஆள் எடுக்கிறது.
தலையில் கேமரா... கண்களில் அறிவார்ந்த கண்ணாடி...
துணி மடிப்பது, துணிகளை இஸ்திரி செய்வது என அனைத்தும் படம் பிடிக்கப்படுகிறது.
இந்தியர்கள் பலருக்கு இது தற்காலிக வேலை வாய்ப்பு அளிக்கிறது.
எனினும் இந்தியாவில் அமைப்பு அல்லது நிறுவனம் சாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை 490 மில்லியன்.
அவர்களை AI எப்படிப் பாதிக்கும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படவில்லை எனக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

ஆதாரம் : AFP