Skip to main content
ஈரானைவிட்டு வெளியேறும்படி இந்தியர்களுக்கு உத்தரவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானைவிட்டு வெளியேறும்படி இந்தியர்களுக்கு உத்தரவு

வாசிப்புநேரம் -
ஈரானைவிட்டு வெளியேறும்படி இந்தியர்களுக்கு உத்தரவு
வெளியீடு : 08 Apr 2026 08:40PM புதுப்பிப்பு : 09 Apr 2026 02:34PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சண்டை நிறுத்தம் எட்டப்பட்டபோதிலும் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறும்படி இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அந்த அறிவிப்பை வெளியிட்டது. 

இந்தியக் குடிமக்கள் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஈரானைவிட்டு வெளியேறுவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பாதைகளைப் பயன்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டது. 

ஆலோசனையின்றி எந்தவொரு நில எல்லைப் பகுதியையும்  அணுகக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட தூதரக அறிக்கையின்படி குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு உட்புறங்களில் இருக்கவேண்டும். 

மின் உற்பத்தித் தளங்கள், ராணுவத்தளங்கள், கட்டடங்களின் உயர் மாடிகள் போன்ற இடங்களைத் தவிர்க்கும்படி தூதரகம் எச்சரித்தது.

இதுவரை ஈரானிலிருந்து சுமார் 1,700 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப ஆதரவு வழங்கப்பட்டிருப்பதாய் இந்திய  வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. 

ஆர்மேனியா, அஸெர்பைஜான் வழியாக அவர்கள் மீட்கப்பட்டனர். 

அவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்களும் மீனவர்களும் என்று இந்திய ஊடகங்கள் கூறின. 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்