Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் பிளாஸ்டிக் - தடையால் பயன் என்ன?

வாசிப்புநேரம் -
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரிய அளவில் பயனளித்ததாகத் தெரியவில்லை.

உலகின் பிளாஸ்டிக் கழிவுகள் குவியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடும்.

மக்களுடன், புதிய நிறுவனங்களும் பிரச்சினையைச் சமாளிக்க முயல்கின்றன.

இந்தியாவில் ஓர் ஆண்டு சேரும் பிளாஸ்டிக் கழிவு சுமார் ஒன்பதே கால் மில்லியன் டன்.

நைஜீரியா, சீனா, இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவுக்குச் சமம்.

குப்பைகளில் சுமார் பாதி தண்ணீர் போத்தல்கள், உறைகள், கரண்டிகள் முதலியன.

மும்பையின் ReCircle நிறுவனம் குப்பை சேகரிப்போருடன் இணைந்து செயல்படுகிறது.

கழிவுகளை வகைப்படுத்துதல், குறைத்தல், வேறு வடிவமாக்குதல் அவர்களின் வேலை.

பெருகும் பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்க மறுபயனீடு ஒருவழி என்பது அவர்களின் நம்பிக்கை.

இந்தியா அதன் பிளாஸ்டிக் கழிவுகளில் 85 விழுக்காட்டை முறையாகக் கையாளவில்லை என்கிறது ஓர் ஆய்வு.

அது அபாயமான அளவு.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஈராண்டுக்கு முன் தடை விதித்தது இந்தியா.

ஆனால் அதற்குப் போதுமான ஆதரவு இல்லை.

இந்தியாவில் சேரும் மூன்றில் இரண்டு பங்கு பிளாஸ்டிக் மறுபயனீடு செய்யப்படுவதாகச் சொல்கிறது அரசாங்கம்.

மேலும் நடவடிக்கை தேவை என்கின்றனர் ஆர்வலர்கள்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்