இந்திய மக்களின் சமையல் வேலைகளுக்குக் கைகொடுக்கும் இயற்கை எரிவாயு
வாசிப்புநேரம் -
(படம்: Pixabay)
இந்தியாவில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மத்திய கிழக்குப் போரால் இந்தியாவில் LPG எரிவாயுத் தட்டுப்பாடு நீடிக்கிறது.
அதைச் சமாளிக்கக் கிராம மக்கள் மாட்டுச் சாணத்திலிருந்து இயற்கை எரிவாயுவைப் பெறுகின்றனர்.
பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுகளை மீத்தேன் வாயுவாக மாற்றும் சிறிய சாதனத்தைக் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சிரமமின்றிச் சிறுசிறு சமையல் வேலைகளை முடிக்க அது பெரிதும் உதவுகிறது. எரிவாயுக் கலன்களை நம்பியிருக்க வேண்டிய தேவையை அது குறைக்கிறது.
இந்தியா ஆண்டுக்கு 30 மில்லியன் டன்னுக்கு மேல் LPG வாயுவைப் பயன்படுத்துகிறது. அதில் பாதிக்கு மேல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. தட்டுப்பாடு நீடிப்பதால் சுழற்சி முறையில் வழங்கப்படும் எரிவாயுக் கலன்களைப் பெற இந்திய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மாட்டுச் சாணத்திலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயு அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை சுமார் ஒன்றரை பில்லியன். அவர்களில் சுமார் 45 விழுக்காட்டினர் விவசாயிகள். உலகில் கால்நடைகள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா திகழ்கிறது. வீட்டுப் பிராணிகளின் கழிவுகளை விவசாயிகள் பயிர்களுக்கான உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.

ஆதாரம் : AFP