மலேசியாவில் UPI மின்னியல் கட்டணம்: பிரதமர் நரேந்திர மோடி
வாசிப்புநேரம் -
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, UPI எனப்படும் இந்திய மின்னியல் கட்டண முறை விரைவில் மலேசியாவில் அறிமுகம் காணும் என்று அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் உள்பட சுமார் 8 நாடுகளில் UPI கட்டண முறை தற்போது நடப்பில் உள்ளது.
பிரதமர் மோடி, மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, தற்காப்பு, மின்னியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இருதரப்பும் விரும்புகின்றன.
இந்தியப் பிரதமரை நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம்.
திரு மோடியின் வருகை இருதரப்புக்கும் இடையே இருக்கும் நீண்டகால வலுவான உறவுக்குச் சான்று என்றார் திரு அன்வார்.