Skip to main content
விடாமல் சரியும் இந்திய ரூபாய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விடாமல் சரியும் இந்திய ரூபாய்

வாசிப்புநேரம் -
விடாமல் சரியும் இந்திய ரூபாய்
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாய் 19 காசானது.

இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரூபாயின் மதிப்பு மோசமாவதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளும் வர்த்தகப்
பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்தது.

மே மாதத்தில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ரூபாய் 75 காசாக இருந்தது.

பேச்சுவார்த்தை முன்னேற்றம் காணாததால் வெளிநாட்டு முதலீடு சரிந்தது.

இந்த ஆண்டு (2025) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதுவரை சுமார் 16 பில்லியன் டாலரை இந்தியப் பங்குகளிலிருந்து மீட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஆசியாவிலேயே ஆக அதிகமாக வலுவிழந்த நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 64 காசாக உள்ளது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்