Skip to main content
"மீண்டும் நியமனம் வேண்டாம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"மீண்டும் நியமனம் வேண்டாம்" - டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு

வாசிப்புநேரம் -
"மீண்டும் நியமனம் வேண்டாம்" - டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு

படம்: REUTERS/Francis Mascarenhas/File Photo

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் அடுத்த ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும் மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அவருக்கு வயது 63.

2027ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது.

தம்மை மீண்டும் நியமிப்பது குறித்து கடந்த 6 மாதங்களாக நிர்வாகக் குழு ஆலோசித்து வந்தாலும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மீண்டும் நியமிக்கப்படுவதற்குத் தாம் விருப்பம் தெரிவிக்கப் போவதில்லை என்றும் சந்திரசேகரன் கூறினார்.

நிறுவனத்தின் அடுத்த தலைவரை விரைவில் தேர்வு செய்து பொறுப்புகள் சுமுகமாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டாடா குழுமத்தின் பல முக்கியத் திட்டங்கள் தற்போது முக்கியக் கட்டத்தில் உள்ளன.

எனவே தலைமைப் பொறுப்பு குறித்து விரைவில் முடிவெடுப்பது அவசியம் என்றார் அவர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்