Skip to main content
IndiGo மீது விசாரணை நடத்த உத்தரவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

IndiGo மீது விசாரணை நடத்த உத்தரவு

வாசிப்புநேரம் -
IndiGo மீது விசாரணை நடத்த உத்தரவு
(படம்: AFP/Idrees Mohammed)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் சென்ற ஆண்டு (2025) பெரிய அளவில் சேவைகளை ரத்துசெய்தது, செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தியதாக அந்நாட்டின் போட்டித்தன்மை ஆணையம் கூறியுள்ளது.

நிறுவனம் மீது விசாரணை நடத்த அது உத்தரவிட்டுள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ நிறுவனம் சுமார் 4,500 விமானச் சேவைகளை ரத்து செய்தது. இதனால் பல்லாயிரம் பேரின் பயணங்கள் தடைபட்டன.

சந்தையில் அதிகப் போட்டி இல்லை என்பதை இது நன்கு வெளிப்படுத்துவதாக ஆணையம் குறிப்பிட்டது.

இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஆகப் பெரிய நிறுவனம் இண்டிகோ.

அது பல விமானச் சேவைகளை ரத்து செய்ததால் பயணக் கட்டணம் அதிகரித்தது என்றும் பயணிகளுக்குப் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டது என்றும் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அதை அடுத்து விசாரணை நடத்த இந்தியப் போட்டித்தன்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்