Skip to main content
இந்தோனேசியா வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியா வெள்ளம் - 750 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
ஆசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்புப் பணிகள் மும்முரமாய்த் தொடர்கின்றன.

வலுவான 3 புயல்கள், வெள்ளம், நிலச்சரிவுகளில் 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

தென்கிழக்காசியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் சுமார் 750 பேர் மாண்டனர். மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தது.

தற்காலிக முகாம்களை அமைக்கும் பணியை இந்தோனேசியா முடுக்கிவிட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன் வெள்ளமும், நிலச்சரிவும் புரட்டிப் போட்ட சுமத்ரா தீவில் தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

550க்கும் அதிகமானோரைக் காணவில்லை.

இயற்கைப் பேரிடரின் பாதிப்பு முழுமையாக மதிப்பிடப்படவில்லை.

பருவநிலை மாற்றமே மோசமான வெள்ளத்துக்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காடுகள் அழிக்கப்படுவது வெள்ள நிலவரத்தை மோசமாக்குவதாக அவர்கள் கூறினர்.

பெருமளவு மரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பெருமளவு மழை நீரைத் தடுத்து உறிஞ்சுவதில் காடுகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்