இந்தோனேசிய முன்னாள் அமைச்சர், Gojek நிறுவனர் மீது ஊழல் குற்றச்சாட்டு
REUTERS/Willy Kurniawan
This audio is generated by an AI tool.
இந்தோனேசிய Gojek நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான நடியம் மகரிம் (Nadiem Makarim)தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் மீது ஊழல் சந்தேகம் எழுந்துள்ளது.
2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தோனேசியாவின் கல்வி அமைச்சராக இருந்தவர் மகரிம்.
அவர் Google Chromebook மடிக்கணினிகளை முறைதவறி கொள்முதல் செய்ததாக அதிகாரிகள் கூறினர்.
மகரிம் Google நிறுவனப் பிரதிநிதிகளை ஆறு முறை சந்தித்த பிறகு மடிக்கணினி கொள்முதல் ஆணையை வெளியிட்டதாகச் சொல்லப்பட்டது.
அவர் அதிகாரத்தைத் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியதாய்ச் சந்தேகிக்கப்படுகிறது.
அதனால் அரசாங்கத்திற்கு 1.98 டிரில்லியன் ருபியா (சுமார் 155 மில்லியன் வெள்ளி) நட்டம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
விசாரணைக்கு ஏதுவாக 20 நாள்களுக்குத் அவரது தடுப்புக்காவல் நீடிக்கும்.