Skip to main content
மராப்பி எரிமலை வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மராப்பி எரிமலை வெடிப்பு - தேடப்பட்டோரில் பெரும்பாலோர் மரணம்

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள மராப்பி (Marapi) எரிமலை வெடிப்பில் மாண்டோர் எண்ணிக்கை 22க்கு அதிகரித்துள்ளது.

காணாமற்போனதாகக் கூறப்பட்ட 10 பேரில் 9 பேர் மாண்டனர். 

எஞ்சிய ஒருவரைத் தேடும் பணி தொடர்வதாகத் தேடல், மீட்பு அமைப்பு தெரிவித்தது. 

மாண்டோரின் சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக மலைக்குக் கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர்) எரிமலை குமுறத் தொடங்கியது.

அப்போது சுமார் 75 மலையேறிகள் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவும் தோலின் சில பாகங்களில் தீக்காயங்களும் ஏற்பட்டிருந்தன.

200க்கும் அதிகமானோர் தேடல் மீட்புப் பணிகளில் கைகொடுத்துள்ளனர்.

எரிமலை தொடர்ந்து குமுறி வருவது மீட்புப் பணிகளுக்கு இடையூறாக அமைந்தது.

மராப்பி சுமத்திரா தீவில் ஆக அதிகமாகக் குமுறும் எரிமலை.

கிட்டத்தட்ட 3,000 மீட்டர் உயரத்திற்கு அது சாம்பலைக் கக்கியது.

எரிமலையின் உயரத்தைவிட அது அதிகம்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்