Skip to main content
சத்துணவு அலுவலகம் மூடப்பட்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சத்துணவு அலுவலகம் மூடப்பட்டது

வாசிப்புநேரம் -
சத்துணவு அலுவலகம் மூடப்பட்டது

AFP/Chaideer Mahyuddin

இந்தோனேசியத் தேசிய சத்துணவு அமைப்பின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இலவச உணவுத் திட்டம் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து விசாரணை நடத்தப்படுகிறது.

அண்மைக்காலத்தில் பல இடங்களில் நச்சுணவுச் சம்பவங்கள் ஏற்பட்டன.

ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலவரப்படி பள்ளிகளில் குறைந்தது 33,000 பிள்ளைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிபர் பிரபவோ சுபியாந்தோ, சத்துணவுத் திட்ட அமைப்பின் தலைவர் தாதான் ஹிண்ட யானாவைப்  பதவியிலிருந்து நீக்கினார்.

திரு பிரபோவோ 2024 தேர்தல் பிரசாரத்தில் இலவச உணவுத் திட்டத்தை முக்கியமாக முன்வைத்தார், 

தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

சுமார் 83 மில்லியன் பிள்ளைகள், கர்ப்பணிகளுக்கு இலவசமாக உணவு வழங்குவது திட்டத்தின் இலக்கு.

அதற்கு 15 பில்லியன் டாலர் (19.2 பில்லியன் வெள்ளி) நிதியை அரசாங்கம் ஒதுக்கியது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்