Skip to main content
இந்தோனேசியாவில் பெட்ரோல் விலை உயர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியாவில் பெட்ரோல் விலை உயர்வு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் பெட்ரோல் விலை உயர்வு

(படம்: MARKO PERKOV / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியாவின் அரசாங்க நிறுவனமான Pertamina, பெட்ரோல் விலையை மூன்றில் ஒரு பங்கு உயர்த்திருக்கிறது.

நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் Pertamax எனும் பெட்ரோல் லிட்டருக்கு 4,000 ரூப்பியா உயர்ந்து சுமார் 16,000 ரூப்பியாவுக்கு விற்கிறது.

அது 32 விழுக்காட்டு உயர்வு.

இந்தோனேசிய வங்கி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பெட்ரோல் பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் பொருள்களின் விலையில் பெரிய தாக்கம் இருக்காது என்று இந்தோனேசிய நிதியமைச்சர் புர்பாயா சடேவா (Purbaya Sadewa) கூறினார்.

Pertamax எரிபொருள் வழக்கமாக சலுகை விலையில் விற்கப்படுவதில்லை.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்