Skip to main content
இந்தோனேசியாவில் மின்சிகரெட்டுகளுக்குத் தடை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியாவில் மின்சிகரெட்டுகளுக்குத் தடை?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியா மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கிறது. ஆனால் அந்தத் தடை எப்படி அமல்படுத்தப்படும்; எத்தகைய தண்டனைகள் விதிக்கப்படும் என்ற விவரங்களை அது இன்னும் வெளியிடவில்லை. இந்தோனேசியத் தேசிய போதைப்பொருள் தடுப்புச் சங்கம்,மின்சிக்ரெட்டுகளின் வாயிலாகப் போதைப்பொருள்கள் பெருமளவில் விநியோகிக்கப்படுவதாகக் கூறுகிறது. மின்சிகரெட்டுகள் சிலவற்றைச் சோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்தது. Etomidate, methamphetamine ஆகியவற்றுடன் கஞ்சா போதைப்பொருள்களும் இருந்தது சோதனையில் உறுதியானது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தோனேசியாவில் மின்சிகரெட்டைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்துள்ளது
அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. 2021இல் 6.2 மில்லியன் பேர் மின்சிகரெட்டைப் பயன்படுத்தினர். அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோரில் 3 விழுக்காட்டினருக்கு அந்தப் பழக்கம் இருந்தது. 2011இல் அது 0.3 விழுக்காடாய் இருந்தது. சிங்கப்பூர், தாய்லந்து, வியட்நாம், புருணை, லாவோஸ் உள்ளிட்ட பல நாடுகள் மின்சிகரெட்டுகளுக்கு எதிரான தடைகளைப் பிறப்பித்துள்ளன. மலேசியா இவ்வாண்டின் நடுப்பகுதிக்குள் அத்தகைய தடைகளை நாடு முழுதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
 

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்