Skip to main content
இந்தோனேசிய ஆர்ப்பாட்டம்: $70 மில்லியன் இழப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசிய ஆர்ப்பாட்டம்: $70 மில்லியன் இழப்பு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தின்போது இளையர் ஒருவர் மாண்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 7 காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படலாம்.

Kompolnas எனும் இந்தோனேசிய தேசியக் காவல்துறை ஆணையம் அதற்குப் பரிந்துரைத்துள்ளது.

அவர்கள் மீது நெறிமுறைத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஓட்டிச்சென்ற வாகனம் மோதி அஃபான் குர்னியாவான் (Affan Kurniawan) எனும் 21 வயது விநியோக ஓட்டுநர் மாண்டார்.

இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் இளையருக்குத் தொடர்பில்லை.

நடந்ததற்குப் பொதுமக்கள் நீதி கேட்டு வருகின்றனர். அதற்காக அதிகாரிகள் மீது முறையான விசாரணைகள் மேகொள்ளப்பட வேண்டும் என்று Kompolnas கூறியிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

20 பேரைக் காணவில்லை.

1,680 பேர் கைதானதாகத் தேசிய மனித உரிமை ஆணையம் இன்று கூறியது.

ஒரு வார ஆர்ப்பாட்டத்தில் 54.8 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 70 மில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்தோனேசியப் பொதுப் பணி அமைச்சு தெரிவித்தது.
 
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்