கத்தாருக்கு இந்தோனேசியா ஆதரவு
வாசிப்புநேரம் -
படம்: Facebook/Setkab RI
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கத்தாருடன் துணை நிற்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக இந்த வாரம் டோஹாவில் உள்ள ஹமாஸ் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆகாயத் தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து திரு பிரபோவோ கத்தார் சென்று ஆட்சியாளரைச் சந்தித்தார்.
கத்தாரின் அரசுரிமைக்கு இந்தோனேசியா முழுமையாக ஆதரவளிப்பதாகவும் நாட்டு மக்களுடன் துணை நிற்பதாகவும் திரு பிரபோவோ சொன்னார்.
திரு பிரபோவோவின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கத்தார் ஆட்சியாளர் இரு நாட்டிற்கு இடையிலான வலுவான உறவுகளை அது பிரதிபலிப்பதாகக் கூறியதாய்க் கத்தார் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆதாரம் : AGENCIES