இலவச உணவுத் திட்டம் இனி புறநகர்ப் பகுதிகளில் கவனம் செலுத்தும்"
படம்: REUTERS/Willy Kurniawan
இந்தோனேசியாவின் இலவச உணவுத் திட்டம் இனி தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களைச் சென்றடைவதில் கவனம் செலுத்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உணவுத் திட்டம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) அறிமுகம் செய்த திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவுத் திட்டம். மாணவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சத்தான உணவை வழங்கத் திட்டம் முனைகிறது.
எனினும் அதிகச் செலவு, அண்மையில் ஏற்பட்ட நச்சுணவுச் சம்பவங்கள் ஆகியவற்றால் குறைகூறல்கள் எழுந்துள்ளன.
திட்டத்தின் முன்னாள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதிய தலைவர் சேவையை மேம்படுத்த உறுதிகூறியுள்ளார்.