மராப்பி எரிமலை வெடிப்பு - அனைத்து மலையேறிகளும் மீட்கப்பட்டனர்
வாசிப்புநேரம் -
Reuters
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள மராப்பி (Marapi) எரிமலை வெடித்ததில் 23 பேர் மாண்டனர்.
அதில் சிக்கிய அனைத்து மலையேறிகளும் மீட்கப்பட்டதாகத் தேடல், மீட்பு அமைப்பு இன்று தெரிவித்தது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர்) எரிமலை குமுறத் தொடங்கியது.
அப்போது 75 மலையேறிகள் அங்கிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று 22 சடலங்கள் மீட்கப்பட்டன.
எஞ்சிய ஒருவர் இன்று கண்டுபிடிக்கப்பட்டார்.
நிலப்பகுதி மோசமாக இருந்ததாலும் 7 வெடிப்புகள் நேர்ந்ததாலும் தேடல், மீட்புப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டது என்று குழு தெரிவித்தது.
மராப்பி சுமத்திரா தீவில் ஆக அதிகமாகக் குமுறும் எரிமலைகளில் ஒன்று.
கிட்டத்தட்ட 3,000 மீட்டர் உயரத்திற்கு அது சாம்பலைக் கக்கியது.
எரிமலையின் உயரத்தைவிட அது அதிகம்.

ஆதாரம் : CNA