எரிமலை வெடிப்பு - முதல் உடல் மீட்பு
படம்: Handout/BASARNAS/AFP
இந்தோனேசிய எரிமலை வெடிப்பில் காணாமல் போன மூவரில் ஒருவரின் உடல் கிடைத்துவிட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அவர் இந்தோனேசியப் பெண் என்று நம்பப்படுகிறது.
எஞ்சிய இருவர் சிங்கப்பூரர்கள்.
அவர்களுடைய உடல்கள் இருக்கும் இடத்தை மீட்புப்பணியாளர்கள் அடையாளம் கண்டுவிட்டனர். எரிமலைப் பள்ளத்திலிருந்து 20 - 30 மீட்டர் தூரத்தில் உடல்கள் இருப்பதாக இந்தோனேசியாவின் பேரிடர் நிர்வாக அமைப்பு Facebook பக்கத்தில் பகிர்ந்தது.
ஆனால் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
எரிமலையிலிருந்து கக்கப்படும் வெப்பமான சாம்பல் மீட்புப்பணிக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது.
அந்த மூவர் வேறு 17 பேருடன் சேர்ந்து மலையேறச் சென்றனர்.