Skip to main content
இந்தோனேசியா போராட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியா போராட்டம் - காவல்துறை அதிகாரி பணிநீக்கம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா போராட்டம் - காவல்துறை அதிகாரி பணிநீக்கம்

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியாவில் விநியோக ஓட்டுநர் ஒருவரை மோதிக் கொன்ற கவச வாகனத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விநியோக ஓட்டுநர் 21 வயது அஃபான் குர்னியாவானின் (Affan Kurniawan) மரணத்தால் நாட்டின் பல இடங்களில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் மோசமடைந்தது.

பணிநீக்கப்பட்ட காவல்துறை அதிகாரி மேல்முறையீடு செய்ய யோசிப்பதாகப் சொன்னார்.

யாரையும் கொல்வது தமது நோக்கமல்ல;
கொடுத்த வேலையைத்தான் செய்ததாக அவர் சொல்கிறார்.

அந்தக் கவச வாகனத்தில் அவருடன் மேலும் 6 அதிகாரிகள் இருந்தனர்.

அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே கடந்த வாரம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர் அணியினரை அரசாங்க அதிகாரிகள் சந்தித்துப் பேசுகின்றனர்.

அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டுத் தீர்வுகாண முயற்சி எடுக்கப்படுகிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்