கின்னஸ் உலகச் சாதனை படைத்த ஆக நீளமான வனப் பாம்பு
வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் சுலாவெசியில் (Sulawesi) கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு ஒன்று கின்னஸ் உலகச் சாதனை (Guinness World Record) படைத்துள்ளது.
அது Malayopython reticulatus ரக மலைப்பாம்பு.
அந்த ராட்சதப் பெண் மலைப்பாம்பு ஆக நீளமான வனப்பாம்பு என்று நம்பப்படுகிறது.
மாரோஸ் (Maros) எனும் பகுதியில் இருந்த அந்தப் பாம்பு முறையாக அளவிடப்பட்டது.
ஜனவரி 18ஆம் தேதி எடுக்கப்பட்ட அளவின்படி அது 7.22 மீட்டர் நீளம் கொண்டது.
அதாவது FIFA காற்பந்தாட்டப் போட்டியில் பயன்படுத்தப்படும் கோலின் (goal) அகலம் அந்தப் பாம்பின் நீளம் என்று கூறப்படுகிறது.
பாம்பு மயக்க நிலையில் இருக்கும்போது அதனுடைய உடல் தளர்ந்திருக்கும். அப்போது பாம்பின் நீளம் குறைந்தது 10 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் மயக்க ஊசி போடப்படவில்லை.
தற்போது அந்தப் பாம்பு உள்ளூர்ப் பாதுகாவலர் புடி புர்வாண்டோவின் (Budi Purwanto) பராமரிப்பின் கீழ் உள்ளது.

ஆதாரம் : Others