Skip to main content
இந்தோனேசியாவில் வெடித்துக் கிளம்பிய லக்கி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியாவில் வெடித்துக் கிளம்பிய லக்கி-லக்கி எரிமலை

வாசிப்புநேரம் -
 இந்தோனேசியாவில் வெடித்துக் கிளம்பிய லக்கி-லக்கி எரிமலை

கோப்புப்படம்: AFP/Arnold Welianto

வெளியீடு : 05 Jun 2026 04:36PM புதுப்பிப்பு : 05 Jun 2026 05:32PM

இந்தோனேசியாவின் கிழக்கிலுள்ள லெவொட்டொபி லக்கி-லக்கி (Lewotobi Laki-laki) எரிமலை வெடித்திருக்கிறது.

ஃப்லொரெஸ் (Flores) தீவில் காலை சுமார் 11 மணிக்கு எரிமலை வெடிப்பு தொடங்கியது.

2.5 கிலோமீட்டர் உயரம் வரை அது சாம்பலைக் கக்கியது.

இன்று காலை சில முறை குமுறிய எரிமலை இறுதியில் வெடித்தது.

வட்டார விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அது எரிமலையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சுமார் 5 உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக AFP ஊடகம் சொன்னது.

கனத்த மழை பெய்ததால் எரிமலையின் சாம்பல் வெள்ளத்தில் கலந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

எரிமலைக் குழம்பு வெளியேற வாய்ப்புள்ளதால் ஆற்றோரம் வாழும் மக்கள் கவனமாக இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எரிமலை வாயைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதிக்குள் பொதுமக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய மொழியில் 'Laki-Laki என்றால் "ஆண்" என்று பொருள்.

1,584 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலைக்கு அருகில் அமைதியாகக் காணப்படும் 1,703 மீட்டர் உயரமுள்ள மற்றோர் எரிமலையும் உள்ளது. அதற்கு இந்தோனேசிய மொழியில் "பெண்" என்று பொருள்படும் 'Perempuan' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்