Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முன்பு COVID-19 தொற்றியவர்களுக்கு, நோய்த்தொற்றிலிருந்து தடுப்புமருந்தைவிடக் கூடுதல் பாதுகாப்பு உண்டு: அமெரிக்க அதிகாரிகள்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயார்க் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள், ஒருவருக்கு ஏற்படக்கூடிய COVID-19 நோய்த்தொற்று, தடுப்புமருந்தைவிட அதிகமாகப் பாதுகாப்பை வழங்கும் என்பதைத் தெரிவித்துள்ளனர். 

முன்பு நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு டெல்ட்டாவகை நோய்த்தொற்றுக்கு எதிராக ஆக அதிகமான பாதுகாப்பு இருந்ததாகவும் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்தது. 

தடுப்பூசி போட்டுக்கொண்டோர், நோய்த்தொற்று ஏற்படாதோர் ஆகியோரின் உடலில் அத்தகைய நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், ஆய்வின் முடிவுகள் ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றுக்குப் பொருந்தாது என்றும் கூறப்பட்டது.

எனவே, நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதே மிகச் சிறந்த வழி என அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்