Skip to main content
Instagram
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Instagram - 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குக் கட்டுப்பாடு

வாசிப்புநேரம் -
Instagram சமூக வலைத்தளம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக் கூடிய காணொளிகளுக்குக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்கிறது.

கடுஞ்சொற்கள், ஆபத்தான செயல்கள், போதைப்பொருள் பற்றிய குறிப்புகள் போன்றவற்றைக் கொண்ட காணொளிகள் தடை செய்யப்படும்.

Meta நிறுவனத்திற்குச் சொந்தமானது Instagram.

பதின்ம வயதினரைப் பாதுகாக்கப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டைப் பல காலமாகவே நிறுவனம் எதிர்நோக்குகிறது.

Meta கடந்த பல ஆண்டுகளில் செயல்படுத்திய நடவடிக்கைகள் சரிவர வேலை செய்யவில்லை அல்லது நடப்பில் இல்லை.

கடந்த செப்டம்பரில் செய்யப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது.

Metaவின் அண்மைய நடவடிக்கையின் மூலம் பதின்ம வயதினரின் Instagram கணக்குகள் PG -13 எனும் வரையறைக்குள் வரும்.

இந்தக் கட்டுப்பாடுகளைப் பெற்றோர் தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கலாம்.

புதிய கட்டுப்பாடுகள் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளுக்கும் பொருந்தும்.

இப்போது அறிமுகம் செய்யப்படும் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடாவில் தொடங்கும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவை முழுமையாக நடப்புக்கு வரும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்