Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இன்று அனைத்துலகப் பெண் பொறியாளர்கள் தினம்!

வாசிப்புநேரம் -

இன்று அனைத்துலகப் பெண் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இது பொறியியல் படிக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் ஒரு தினமாகக் கருதப்படுகிறது. 

பல நூற்றாண்டாக முக்கியக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் இயந்திரங்களின் வடிவமைப்பாளர்களாகவும் பெண்கள் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர். 

இருப்பினும் பெண்கள் பெரும்பாலும் பொறியியல் போன்ற துறைகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

ஆனால் அசாத்தியத்தையும் அசராமல் செய்பவர்கள் பெண்கள்.

1876ஆம் ஆண்டு எலிசபெத் பிராக் (Elizabeth Bragg) பாலின பாகுபாடுகளைத் தகர்த்தெறிந்து பெர்க்லி (Berkeley) பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். 

அவர் சிவில் பொறியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 19ஆம் நூற்றாண்டின் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

உலகின் முதல் கணினி நிரலை சார்லஸ் பாபேஜுடன் (Charles Babbage) சேர்ந்து வடிவமைத்தது அடா லவ்லேஸ் (Ada Lovelace) என்ற பெண்தானே...

2ஆம் உலகப் போர்வரை தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் கல்விக்கு அதிகக் கவனம் செலுத்தப்படவில்லை. 

21ஆம் நூற்றாண்டில்கூட தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம். 

இருப்பினும் இத்துறைகளில் பெண்கள் தொடர்ந்து சாதனை புரிகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்