ஈரானில் ஆர்ப்பாட்டம் ஓய்ந்துவிட்டதா?
This audio is generated by an AI tool.
ஈரானில் பெரிய அளவில் வெடித்த ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்துவிட்டதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் நடத்திய ஒடுக்குமுறையில் பல்லாயிரம் பேர் மாண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஈரான் பல ஆண்டு காணாத மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைச் சந்தித்தது.
அமெரிக்கா, ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்றும் கருதப்பட்டது.
ஆனால் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள், வேண்டாம் என்று சொல்லி அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் (Donald Trump) சம்மதிக்க வைத்துவிட்டதாக சவுதி அதிகாரி கூறினார்.
ஈரானிய அரசாங்கத்துக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.