பஹ்ரேனில் அமெரிக்க ஆகாயப் படைத்தளம் அழிக்கப்பட்டது: ஈரானிய அரசாங்க ஊடகம்
This audio is generated by an AI tool.
பஹ்ரேனிலிருக்கும் அமெரிக்க ஆகாயப் படைத்தளத்தை அழித்துவிட்டதாக ஈரான் அறிவித்திருக்கிறது.
ஈரானின் Fars ஊடகம் தாக்குதலின் காணொளியை வெளியிட்டது.
அதில் ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகளும் ஆளில்லா வானூர்திகளும் வெகுதூரத்தில் வெடிப்பது தெரிந்தது.
அமெரிக்கத் தளபத்திய நிலையத்தையும் படையினர் கட்டடத்தையும் அழித்ததாக ஈரான் கூறியது
அதில் அங்கிருந்த எரிபொருள் கலன்கள் வெடித்ததாக ஈரான் சொன்னது.
தாக்குதல் குறித்து அமெரிக்கா எதுவும் கூறவில்லை.
பஹ்ரேனிலுள்ள அமெரிக்க ஆகாயப் படைத்தளத்தில் புகைமூட்டம் தெரிந்ததாக BBC தெரிவித்தது.
பஹ்ரேனிலிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டிருக்கிறது.