Skip to main content
ஈரானில் பெரிதாகும் ஆர்ப்பாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானில் பெரிதாகும் ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -
ஈரானில் பெரிதாகும் ஆர்ப்பாட்டம்
UGC via AP
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலும் (Tehran), மற்ற சில வட்டாரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் கடுமையாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அங்கு இணையக் கட்டமைப்பும் தொலைத்தொடர்புக் கட்டமைப்பும் முடக்கப்பட்டுள்ள நிலையில் சமூக ஊடகங்களில் சில காணாளிகள் வெளியாகியுள்ளன.

அவற்றில்  ஆயிரக்கணக்கானோர் தெஹ்ரானில் பேரணி நடத்துவதையும் அரசாங்கத்திற்கு எதிராக முழங்குவதையும் பார்க்கமுடிகிறது.

சாலைகளில் சடலங்கள் கிடக்கின்றன.

அண்மை ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து, ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் ஆர்ப்பாட்டங்கள்  தொடங்கின. அவை இப்போது அரசாங்கத்துக்கு எதிராக மாறியுள்ளன.

இதுவரை 60க்கும் அதிகமானோர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

2,300க்கும் அதிகமானோர் கைதானதாக அமெரிக்காவைச் சார்ந்த மனித உரிமை அமைப்பு நம்புகிறது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்