Skip to main content
ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான் - சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

வாசிப்புநேரம் -
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் (Wang Yi) சந்தித்துப் பேசியிருக்கிறார்.

சந்திப்பின் மேல் விவரங்களை Xinhua செய்தி நிறுவனம் உடனடியாக வழங்கவில்லை.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து இரு அதிகாரிகளும் பலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர்.

பதற்றத்தைத் தணிக்கவேண்டும் என்றும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு வாங் முன்னதாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே, நீரிணையில் சிக்கிக்கொண்ட கப்பல்களுக்கு வழிகாட்டும் நடவடிக்கையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.

ஒப்பந்தம் எட்டப்படுமா என்பதைப் பார்க்க நடவடிக்கை சிறிது காலம் நிறுத்தப்படுவதாய்த் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்