ஈரான் போர் - மத்திய கிழக்கில் அகதிகள் நெருக்கடி?
படம்: Mohsen Karimi/AFP
This audio is generated by an AI tool.
ஈரான் போரால் மத்திய கிழக்கில் புதிய அகதிகள் நெருக்கடி தோன்றலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
ஈரானில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிடுகிறது.
ஈராக், துருக்கியே, ஆர்மீனியா, அஸர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளுடன் ஈரான் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. ஈரானின் அண்டை நாடுகள் அதிக அளவில் அகதிகள் வரக்கூடும் என்று கவலைப்படுகின்றன.
இதுவரை ஈரான் மக்கள் புகலிடம் தேடி வரவில்லை என்று துருக்கியே கூறுகிறது.
இருந்தாலும் ஈரானை விட்டுப் புறப்படும் விமானச் சேவைகள் தற்காலிகமாய் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பல நாடுகளும் அஞ்சுகின்றன.
போர் தொடங்கியதிலிருந்து 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் சில பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன.
பள்ளிகள், மருத்துவ வசதிகள் உட்பட குறைந்தது 10,000 இடங்கள் சேதமடைந்திருக்கின்றன.