ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
படம்: REUTERS/Stringer TPX IMAGES OF THE DAY
This audio is generated by an AI tool.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
வட்டாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஒழியும் வரை நீரிணையை மூடவிருப்பதாக அது கூறியது.
நீரிணையை அனுமதியின்றி ஒரு கப்பல் கடந்ததாவும் அது பல முறை எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் கப்பலைத் தாக்கியதாகவும் புரட்சிப் படை சொன்னது.
தன் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்தது.
அமெரிக்கா அதைப் பொருட்படுத்தவில்லை. ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
சைப்ரஸில் (Cyprus) பதிவான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்கா கண்டித்தது.
ஈரான் இனி அவ்வாறு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அமெரிக்கா கடுமையான பதிலடியைக் கொடுக்கும் என்று அமெரிக்காவின் மத்தியத் தளபத்தியம் கூறியது.