"போர்நிறுத்த உடன்பாட்டை எட்டிய பின்னர் லெபனானைத் தாக்குவது சரியல்ல"
படம்: Anwar AMRO / AFP
This audio is generated by an AI tool.
ஈரானும் அமெரிக்காவும் போர்நிறுத்த உடன்பாட்டை எட்டிய நிலையில் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல என்று ஈரானின் வெளியுறவுத் துணையமைச்சர் சயீத் கத்திப்ஸாடே (Saeed Khatibzadeh) கூறியிருக்கிறார்.
BBCக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் அதனைத் தெரிவித்தார்.
போர் வேண்டுமா, அமைதி வேண்டுமா என்பதை அமெரிக்கா முடிவு செய்யவேண்டும் என்று திரு கத்திப்ஸாடே வலியுறுத்தினார்.
முழு மத்திய கிழக்கு வட்டாரத்தின் நலனைக் கருதியே ஈரான் செயல்படுவதாகவும் அவர் சொன்னார்.
ஹோர்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் திரு கத்திப்ஸாடே தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்கா உண்மையிலேயே இந்த ஆக்கிரமிப்பை நிறுத்திய பிறகு தான் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.