Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலைக் குறிவைத்த ஈரானின் ஆளில்லா வானூர்தி

வாசிப்புநேரம் -
அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலைக் குறிவைத்த ஈரானின் ஆளில்லா வானூர்தி
(கோப்புப் படம்: Karolina A. Martinez / US NAVY / AFP)
வெளியீடு : 04 Feb 2026 11:04AM புதுப்பிப்பு : 04 Feb 2026 12:11PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மத்திய கிழக்கில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலைக் குறிவைத்த ஈரானின் ஆளில்லா வானூர்தியை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

நேற்று (3 பிப்ரவரி) இரு நாடுகளுக்கும் இடையே நேர்ந்த 2ஆவது சம்பவம் அது.

முன்னதாக ஹொர்முஸ் நீரிணையில் ஈரானியப் படையினர் அமெரிக்கக் கொடி ஏந்திய எண்ணெய்க் கப்பலைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இருப்பினும் இந்த வாரம் அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கெரொலைன் லெவிட் (Karoline Leavitt) தெரிவித்தார்.

இரு நாடுகளும் நாளை மறுநாள் (6 பிப்ரவரி) ஈரானின் அணுச்சக்தித் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) பலமுறை மிரட்டியிருக்கிறார்.

அவ்வாறு செய்தால் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்