Skip to main content
மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை
(படம்: Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கப் படையினர் தாக்கினால் பதிலடி கொடுக்கத் தயங்கப்போவதில்லை ஈரான்  எச்சரித்துள்ளது. 

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும் என்று அது கூறியது.  

அமெரிக்கா அந்த வட்டாரத்தில் துருப்புகளை நிறுத்திவைத்திருப்பதை ஈரான் சுட்டியது. 

இதற்கிடையே, யுரேனியத்தைச் செறிவூட்டும்  உரிமை ஈரானுக்கு உண்டு என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

வாஷிங்டன் அதனை மதிக்கவேண்டும் என்றார் அவர். 

அப்போதுதான் அணுச்சக்தி குறித்த பேச்சுவார்த்தை வெற்றியடையும் என்று அவர் சொன்னார். 

சென்ற வெள்ளிக்கிழமை (6 பிப்ரவரி) அமெரிக்காவும் ஈரானும் ஓமானில் பேச்சு நடத்தின.

அது குறித்து தனது பங்காளி நாடுகளான சீனா, ரஷ்யாவுடன் ஆலோசிக்கப்போவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்