Skip to main content
"ஈரானியத் தாக்குதல் மிகப் பலவீனமானது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ஈரானியத் தாக்குதல் மிகப் பலவீனமானது" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாசிப்புநேரம் -
"ஈரானியத் தாக்குதல் மிகப் பலவீனமானது" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படங்கள்: REUTERS/Stringer/Carlos Barria)

ஈரான் கத்தாரில் உள்ள அல் உதேய்த் (Al Udeid) அமெரிக்க ஆகாயப் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

சனிக்கிழமை அமெரிக்கா தனது அணுச்சக்தித் தளங்கள் மீது நடத்திய தாக்குலுக்குப் பதிலடி அந்தத் தாக்குதல் என்கிறது ஈரான்.

"நாங்கள் யாரையும் தாக்கவில்லை. பிறர் எங்களைத் தாக்குவதையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டோம்," என்று ஈரானின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) கூறினார்.

தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் சொன்னதற்காக ஈரானுக்கு நன்றி கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் மிகப் பலவீனமானது என்றார்.

கத்தார் குடிமக்களோ அமெரிக்கர்களோ தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றார் அவர்.

அமெரிக்கா வழிநடத்தும் அல் உதேய்த் படைத்தளத்தில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகக் கூறிய கத்தார், ஈரானின் தாக்குதல் அப்பட்டமான அத்துமீறல் என்றது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்