Skip to main content
போர் நடத்தியதற்கு அமெரிக்காவிடம் பணம் கேட்கிறது ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போர் நடத்தியதற்கு அமெரிக்காவிடம் பணம் கேட்கிறது ஈரான்

வாசிப்புநேரம் -
போர் நடத்தியதற்கு அமெரிக்காவிடம் பணம் கேட்கிறது ஈரான்

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போர் காரணமாக ஈரானுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அமெரிக்கா பணம் தர வேண்டும் என்று ஈரான் சொல்கிறது.

போரை நிறுத்த ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளில் அதுவும் ஒன்று. அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வாரத் தற்காலிகச் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளன.

நீரிணையைத் திறந்தால் இரண்டு வாரத்துக்குத் தாக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதி தந்தார்.

அமெரிக்கா தாக்காமல் இருந்தால் நீரிணையைத் திறக்கப் போவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) உத்தரவாதம் கொடுத்தார்.

ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டத்தை அந்நாட்டு அரசாங்க ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஈராக், லெபனான், ஏமன் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்; ஈரான் மீதான தாக்குதல்கள் முழுமையாக, நிரந்தரமாக, காலவரம்பின்றி நிறுத்தப்படவேண்டும்; ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்;

ஈரான் எதிர்கொண்ட சேதத்துக்கு அமெரிக்கா முழு இழப்பீட்டை வழங்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அது முன்வைத்துள்ளது.

பத்து அம்சங்களிலும் இணக்கம் எட்டப்பட்டால் சண்டை நிறுத்தம் உடனடியாக நடப்புக்கு வரும் என்று ஈரான் தெரிவித்தது.

எனினும் எதிர்த்தரப்பு எவ்விதத் தாக்குதலை நடத்தினாலும் பதிலடி கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானியப் பாதுகாப்பு மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்