Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போரை நிறுத்தாவிட்டால் ஒரு லிட்டர் எண்ணெய்கூடக் கிடைக்காது: ஈரான்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போர் தொடரும்வரை மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல், அவற்றின் நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் கூடக் கிடைக்காது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானியப் புரட்சிப் படை பேச்சாளர் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின.

பதிலுக்கு ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் வளாகங்களையும் தாக்கியது.

போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவிவிட்டதாகக் கூறப்படுகிறது.

உலகின் சுமார் 20 விழுக்காடு எண்ணெய் ஈரான் அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணைவழி செல்கிறது.

போர் தொடங்கியதிலிருந்து நீரிணையில் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது.

நீரிணையைக் கடக்க முயலும் எண்ணெய்க் கப்பல்களை ஈரானியப் படைகள் தாக்கி வருகின்றன.

எண்ணெய் விலையும் ஏறிவிட்டது.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்