Skip to main content
ஈரானிய மக்களுக்கு விரைவில் உதவி: டிரம்ப்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானிய மக்களுக்கு விரைவில் உதவி: டிரம்ப்

வாசிப்புநேரம் -
ஈரானிய மக்களுக்கு விரைவில் உதவி: டிரம்ப்
(படம்: Stringer/WANA (West Asia News Agency) via REUTERS)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 14 Jan 2026 09:30AM புதுப்பிப்பு : 14 Jan 2026 12:24PM

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தொடர்ந்து ஆர்ப்பட்டங்களில் ஈடுபடும்படி ஈரானிய மக்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

அவர்களைத் துன்புறுத்தும் நபர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஈரான் மக்களுக்கு உதவி விரைவில் வந்து சேரவுள்ளது என்று அவர் தமது Truth Social பக்கத்தில் தெரிவித்தார்.

ஆனால் எப்படிப்பட்ட உதவி என்று செய்தியாளர்கள் கேட்டதற்குத் திரு டிரம்ப் விளக்கம் அளிக்கவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதை ஈரான் நிறுத்தும் வரை ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்துச் சந்திப்புகளையும் ரத்துசெய்வதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள்மீது 25 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக நேற்று (13 ஜனவரி) அவர் கூறியிருந்தார்.

அந்த முடிவைச் சீனா குறைகூறியது.

சீனா, துருக்கியே, ஈராக், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஈரான் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது.

ஈரானில் சுமார் இரு வாரங்களாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் கூறினார்.

ஈரானிய நாணயத்தின் மதிப்பு சரிந்தது, பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்