Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இஸ்ரேலை நோக்கி ஈரான் 100க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகளை அனுப்பியுள்ளது

வாசிப்புநேரம் -
இஸ்ரேலை நோக்கி ஈரான் 100க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகளை அனுப்பியுள்ளது

படம்: Majid Asgaripour/WANA via REUTERS

இஸ்ரேலை நோக்கி ஈரான் 100க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகளை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

நாட்டில் அடுத்த சில மணி நேரம் நெருக்கடிமிக்கதாக இருக்கும் என்று ராணுவப் பேச்சாளர் எச்சரித்தார்.

ஈரானின் அணுவாயுதத் தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அது பதிலடியாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலின் உளவுத்துறை நடத்திய தாக்குதலில் ஈரானின் ஏவுகணைக் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன.

அந்நாட்டு ராணுவத் தளபதியும் (Hossein Salami) அணுச்சக்தி விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.

ஜோர்தான், துருக்கியே, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் போன்ற நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

சண்டையை வளர்க்கவேண்டாம் என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல், ஈரான், ஈராக், ஜோர்தான் ஆகியவற்றுக்கான விமானச் சேவைகளைச் சில விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்