Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவுடன் அணுச்சக்தி ஒப்பந்தத்தை எட்டப் பேச்சுவார்த்தைக்குத் தயார் - ஈரான்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடன் அணுச்சக்தி ஒப்பந்தத்தை எட்டப் பேச்சுவார்த்தைக்குத் தயார் - ஈரான்
(கோப்புப் படம்: Iranian Foreign Ministry via AP)
அமெரிக்காவுடன் அணுச்சக்தி ஒப்பந்தத்தை எட்ட ஈரான் சமரசப் பேச்சில் ஈடுபடத் தயார் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் தடைகளைத் தளர்த்துவதைப் பற்றிப் பேச அமெரிக்கா தயாராக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

ஈரானின் வெளியுறவுத் துணையமைச்சர் BBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அதனைத் தெரிவித்தார்.

அமெரிக்கா தடைகளைத் தளர்த்தினால் தனது அணுச்சக்தி திட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றிக் கலந்துரையாட ஈரான் தயார் என்று அவர் சொன்னார்.

அணுச்சக்தி ஒப்பந்தப் பேச்சுவாரத்தை இரண்டாம் முறையாக வரும் செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் (Geneva) நடைபெறும்.

முன்னதாக தெஹ்ரானும் வாஷிங்டனும் ஓமானில் கலந்துரையாடல்களை நடத்தின.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்