Skip to main content
தாக்குதல் தொடர்ந்தால் எரிசக்தித் துறைகள் அழிக்கப்படும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாக்குதல் தொடர்ந்தால் எரிசக்தித் துறைகள் அழிக்கப்படும் - மிரட்டும் ஈரான்

வாசிப்புநேரம் -
தாக்குதல் தொடர்ந்தால் எரிசக்தித் துறைகள் அழிக்கப்படும் - மிரட்டும் ஈரான்

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரான், அதன் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால் அரேபிய வளைகுடாவில் இருக்கும் எரிசக்தித் துறைகளை அழிக்கப் போவதாக மிரட்டியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நீடித்தால் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் என்று ஈரானிய அதிபர் எச்சரித்திருக்கிறார்.

ஈரானின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளாகம் நேற்று தாக்கப்பட்டது.

அதற்குப் பதிலடியாக கத்தார், சவுதி அரேபியா மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கத்தாரின் எரிசக்தித் துறை நடுவத்தில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ராஸ் லஃபான் (Ras Laffan) எனும் தொழிற்துறைப் பகுதியை ஈரான் குறிவைத்தது.

அங்கு உலகிலேயே ஆக அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயு சுத்திகரிக்கப்படுகிறது.

நேற்று ரியாத் நோக்கி பாய்ச்சப்பட்ட 4 புவியீர்ப்பு ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்