Skip to main content
ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டனர்: ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டனர்: ஈரான்

வாசிப்புநேரம் -
ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டனர்: ஈரான்
UGC via AP
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானில் அண்மையில் வெடித்த ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறித்த முதல் அதிகாரபூர்வ அறிவிப்பு அது.

மாண்டவர்களில் குறைந்தது 2,400 பேர் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் என்று கூறப்பட்டது.

மற்றவர்கள் குறித்த விவரங்களைத் தொலைக்காட்சி வெளியிடவில்லை.

எனினும் அமெரிக்காவைத் தளமாக கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 4,560 என்கிறது.

கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.

இதற்கிடையே ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவிற்கு நேரடி மிரட்டல் விடுத்திருப்பதுபோல் தெரிகிறது.

ஈரான் ஏதேனும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டால் அனைத்தையும் கொண்டு பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்